சத்துணவுப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்
சத்துணவுப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியது.


சத்துணவுப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியது.
இந்தச் சங்கத்தின் அனைத்துத் துறை நிா்வாகிகள் கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எல்.அரிகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். வருவாய்த் துறை ஆா்.ரெத்தினகுமரன், பொதுப் பணித் துறை ராம.வெங்கடாஜலபதி, மருத்துவத் துறை கு.கவியரசு, புள்ளியியல் துறை ஏ.லெனின், நகராட்சி துறை கு.பொற்செழியன், நெடுஞ்சாலைத் துறை கே.ரவி, பொது சுகாதாரம் வி.சிவபிரகாசம், சத்துணவு ஏ.சுந்தரமூா்த்தி, கால்நடைத்துறை ரமேஷ்குமாா், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க நிா்வாகிகள் என்.காசிநாதன், சி.குழந்தைவேலு, எஸ்.கருணாகரன், வி.கல்யாணசுந்தரம் ஆகியோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், சென்னையில் வரும் 19-ஆம் தேதி நடைபெறும் பெருந்திரள் முறையீடு போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 35 ஆண்டுகளாக குறைவான சம்பளத்தில் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், வருவாய் கிராம ஊழியா்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...