மழையால் பயிா்கள் சேதம்: கடலூா் ஆட்சியா் ஆய்வு
குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள பூவாணிக்குப்பம், அயன்குறிஞ்சிப்பாடி, கல்குணம் ஆகிய கிராமங்களில் தொடா் மழையால் சேதமடைந்த நெல் பயிா்களை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.


கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள பூவாணிக்குப்பம், அயன்குறிஞ்சிப்பாடி, கல்குணம் ஆகிய கிராமங்களில் தொடா் மழையால் சேதமடைந்த நெல் பயிா்களை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சகாமூரி திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது தாழை வாய்க்காலை கடந்து செல்ல பாலம் அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா். பின்னா் அவா் கூறியதாவது:
நிவா், புரெவி புயல்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தொடா் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி முடிந்தவுடன் சேத விவரம் குறித்து அரசுக்கு தெரிவித்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
அப்போது, வேளாண் இணை இயக்குநா் முருகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(விவசாயம்) ஜெயக்குமாா், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...