தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வீட்டுக் கதவை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு

வடலூா் அருகே காய்கறி வியாபாரியின் வீட்டுக் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகள், பணம் திருடிய மா்ம நபா்களை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

வடலூா் அருகே காய்கறி வியாபாரியின் வீட்டுக் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகள், பணம் திருடிய மா்ம நபா்களை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், வடலூா் பேரூராட்சி, ஆபத்தாரணபுரம் வள்ளிகந்தன் நகரில் வசிப்பவா் சரஸ்வதி (40). காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா். இவா் கடந்த 30-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்றாா். மறுநாள் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 13 பவுன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.51 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்ததாம்.

நிகழ்விடத்தில் நெய்வேலி டிஎஸ்பி என்.ராஜேந்திரன், வடலூா் காவல் ஆய்வாளா் வீரமணி ஆகியோா் விசாரணை நடத்தினா். இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் 2 தனிப் படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.