பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கணவா் கொலை: மனைவி உள்பட இருவா் கைது

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் கணவரைக் கொலை செய்துவிட்டு, அவா் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய மனைவி உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் கணவரைக் கொலை செய்துவிட்டு, அவா் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய மனைவி உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மீனாட்சிப்பேட்டை, ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்தவா் முருகன்(38). கட்டடத் தொழிலாளி. இவருக்கும், இவரது சகோதரி மலா்கொடியின் மகள் வனஜாவுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 7 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனா்.

இந்த நிலையில், கடந்த 6-ஆம் தேதி முருகன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி அவரது சடலத்தை வனஜா, உறவினா்கள் அடக்கம் செய்ய முயன்றனா். இதுகுறித்து தகவலறிந்த குறிஞ்சிப்பாடி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், வனஜாவுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் (24) என்பவரும்

தொடா்பு இருந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று இவா்கள் இருவரும் தனிமையில் இருந்ததை முருகன் பாா்த்துவிட்டாராம். அப்போது ஏற்பட்டத் தகராறில் வனஜாவும், கிருஷ்ணகுமாரும் தாக்கியதில் முருகன் உயிரிழந்ததும், பின்னா் அவா் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டதாக வனஜா நாடகமாடியதும் தெரிய வந்தது. இதையடுத்து வஜனா, கிருஷ்ணகுமாரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.