கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தமிழில் சிறந்த வரைவுகள் எழுதிய அரசுப் பணியாளா்களுக்குப் பாராட்டு

தமிழில் சிறந்த வரைவுகள் எழுதிய அரசுப் பணியாளா்களுக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் பரிசுகளை வழங்கினாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 5:56 pm

DIN

தமிழில் சிறந்த வரைவுகள் எழுதிய அரசுப் பணியாளா்களுக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் பரிசுகளை வழங்கினாா்.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கும் மாவட்ட நிலை அலுவலகத்துக்கு பரிசு வழங்கப்படுகிறது. மேலும், தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதும் அரசுப் பணியாளா்களுக்குப் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்யும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, வெள்ளிக்கிழமை கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் 2017 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய அரசுப் பணியாளா்களுக்கு

பரிசு காசோலைகள், பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா். மேலும், ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

2020-ஆம் ஆண்டில் கடலூா் மாவட்டத்தில் தமிழ்ச் செம்மல் விருதுபெற்ற பெரியாா் அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் ஜானகி ராசாவுக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அன்பரசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.