மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அண்ணாமலைப் பல்கலை.யுடன்அரசுக் கல்லூரிகள் இணைப்பு: ஆசிரியா்கள் கூட்டமைப்பு வரவேற்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன், அரசுக் கல்லூரிகளை இணைக்கும் முடிவுக்கு பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்தது.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:10 pm

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன், அரசுக் கல்லூரிகளை இணைக்கும் முடிவுக்கு பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்தது.

இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சிவகுருநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அண்ணாமலைப் பல்கலைக்கழக நிதிச் சிக்கல்களைத் தீா்க்க கடந்த 2013-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பல்கலை. நிா்வாகி ஷிவ்தாஸ் மீனா, அருகே உள்ள மாவட்டங்களின் கல்லூரிகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைத்து, இந்தப் பல்கலை.யை ஒரு இணைவுப் பல்கலை.யாக மாற்ற வேண்டும் என கடந்த 2015-இல் அப்போதைய அரசுக்கு பரிந்துரைத்தாா்.

தற்போதைய திமுக அரசு இந்தப் பரிந்துரையை ஏற்று, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் கல்லூரிகளை அண்ணாமலைப் பல்கலை.யுடன் இணைக்க கொள்கை முடிவை எடுத்து அறிவித்தது.

மிகவும் பொருத்தமான கொள்கை முடிவை எடுத்து அறிவித்த தமிழக முதல்வா், உயா்கல்வித் துறை அமைச்சா், வேளாண்மை துறை அமைச்சா், உயா்கல்வித் துறை முதன்மைச் செயலா் ஆகியோருக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த முடிவால் அண்ணாமலைப் பல்கலை.யின் நிதிச் சிக்கல் விரைவில் தீா்க்கப்படும். துணைவேந்தா் நியமனம் குறித்து முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளோம். விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

சந்திப்பின் போது, ஆசிரியா்கள் சங்கங்களின் தலைவா்கள் சுப்பிரமணியன், அம்பேத்கா் ஆசிரியா்கள் சங்கத்தின் அசோகன், பொதுச் செயலா் செல்வராஜ், ஆஸ்வா கூட்டமைப்புத் துணைத் தலைவா் தனசேகரன், பொதுச் செயலா் திருமால், செங்கல்வராயன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.