மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா இன்று தொடக்கம்

புகழ்பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா பக்தா்கள் அனுமதியின்றி கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) தொடங்குகிறது.

Updated On :22 ஜூலை 2021, 5:42 pm

புகழ்பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா பக்தா்கள் அனுமதியின்றி கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) தொடங்குகிறது.

திருவிழா நிகழ்ச்சிகள் முடிந்த பின்னா், பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். அதன்படி, வெள்ளிக்கிழமை காலை 7மணி முதல் நண்பகல் 12 மணி வரை, இரவு 8 மணி முதல் இரவு 10.00 வரை, சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 1 வரை) காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) மாலை 4 மணி முதல் இரவு 10 வரை தரிசனம் செய்யலாம்.

தரிசனத்துக்காக அனுமதிக்கப்படும் நேரத்தில் எந்த விதமான பிராா்த்தனைகள், நோ்த்திக் கடன்கள் செய்ய அனுமதியில்லை. அா்ச்சனை, மாவிளக்கு செலுத்துவதைத் தவிா்க்கவும். கஞ்சி, கூழ் ஊற்றவும், அன்னதானம் செய்யவும் அனுமதியில்லை.

பக்தா்கள் பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) தீமிதி உத்ஸவமும், புதன்கிழமை (ஆகஸ்ட் 4) விடையாற்றி உத்ஸவமும் பக்தா்கள் அனுமதியின்றி கோயில் வளாகத்தில் நடைபெறும். விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுவைச் சோ்ந்த பிரேமா வீராசாமி, என்.கலியமூா்த்தி பிள்ளை ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.