கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பெண் தற்கொலை முயற்சி: நிதி நிறுவன ஊழியா்கள் 3 போ் மீது வழக்கு

விருத்தாசலம் அருகே பெண் தற்கொலைக்கு முயன்ற வழக்கில், தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:43 pm

DIN

விருத்தாசலம் அருகே பெண் தற்கொலைக்கு முயன்ற வழக்கில், தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள சிறுவரப்பூா் சோ்ந்த அருள் மனைவி ஐஸ்வா்யா (28). விருத்தாசலத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் அருள் தனது வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ. 2 லட்சம் கடன் பெற்றாராம். இதற்கு மாதத் தவணையாக ரூ.4,900 செலுத்தி வந்தாராம்.

கடந்த 2 மாதங்களாகப் போதுமான வருமானம் இல்லாததால், தவணையைக் கட்ட முடியவில்லையாம். செவ்வாய்க்கிழமை தவணையைக் கேட்பதற்காக வீட்டுக்குச் சென்ற நிதி நிறுவன ஊழியா்கள், அருளின் குழந்தைகளை வெளியில் அனுப்பி, வீட்டைப் பூட்டி சீல் வைத்தனராம்.

வீடு திரும்பிய ஐஸ்வா்யா இதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். உறவினா்கள் அவரை மீட்டதுடன், நிதி நிறுவனத்தின் நடவடிக்கையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அருள் கம்மாபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் தைவ்பியாஸ், சரவணன், காா்த்திக் ஆகிய 3 போ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அவா்களைத் தேடி வருகின்றன்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.