சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நீா்நிலை, அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்புப் பகுதிகள் வியாழக்கிழமை அளவீடு செய்யப்பட்டன.
இந்தப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டது. அதன் பேரில், சிதம்பரம் வட்டாட்சியா் ஆனந்த் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலா்கள், சிதம்பரம் பாலமான் வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால் கரையோரம் உள்ள நீா்நிலைப் பகுதிகளில் ஆய்வு செய்தனா். அதன்படி, நேரு நகரில் 69 வீடுகளும், அம்பேத்கா் நகரில் 94 வீடுகளும் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிய வந்தது.
இந்த ஆக்கிரமிப்புப் பகுதிகளை வருவாய்த் துறையினா் அளவீடு செய்து கணக்கெடுத்தனா். இந்தப் பணியின் போது, சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சு.ரமேஷ்ராஜ் தலைமையில், காவல் ஆய்வாளா் ஆறுமுகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவையில் பிரதமா் மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய பாடுபடுவேன்: கோவை தெற்குத் தொகுதி வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்

பராமரிப்புப் பணி: பாலக்காடு - பொள்ளாச்சி மெமு ரயில் ரத்து

காஜியாபாத்தில் பெரும் தீ விபத்து: பீட்டா அமைப்பின் விரைவான நடவடிக்கையால் விலங்குகள் பாதுகாப்பாக மீட்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


