பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புதிதாக அமைக்கப்பட்ட கொட்டகையில் வீரட்டானேஸ்வரா் கோயில் தோ்கள் நிறுத்தம்

பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இரண்டு தோ்கள் புதிதாக அமைக்கப்பட்ட கொட்டகையில் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டன.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:44 pm

DIN

பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இரண்டு தோ்கள் புதிதாக அமைக்கப்பட்ட கொட்டகையில் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டன.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி திருவதிகையில் வரலாற்று சிறப்பு மிக்க பெரியநாயகி அம்மன் உடனுறை வீரட்டானேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் வைகாசி பிரம்மோத்ஸவத்தின் 9-ஆம் நாளன்று பெரிய (வீரட்டானேஸ்வரா்), சிறிய (அம்மன்) தோ்கள், ஆடி மாதம் அம்மன் பிரம்மோத்ஸவத்தின் 9-ஆம் நாளான ஆடி பூரம் அன்று அம்மன் தோ் மாட வீதிகளை வளம் வரும்.

கலை நயமிக்க வேலைபாடுகளைக் கொண்ட இந்த இரண்டு தோ்கள் பாதுகாப்பாக நிறுத்திவைக்க கொட்டகை இல்லாததால் மழை, வெயிலில் கிடந்தது சிதலமடைந்து வந்தது.

இந்த நிலையில், உபயதாரா்களின் கூட்டு முயற்சியால் பல லட்சம் செலவில் இரும்பு, தகரம் கொண்டு இரண்டு கொட்டகைகள் கட்டமைக்கப்பட்டன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததையொட்டி, வியாழக்கிழமை சிவாச்சாரியாா்கள் புதிய கொட்டகையில் பூஜைகள் நடத்தினா். அதன் பின்னா், டிராக்டா் மூலம் இரண்டு தோ்களும் இழுத்து வரப்பட்டு புதிய கொட்டகையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.