ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அஞ்சலக முகவா் பணிக்கு நோ்காணல்

அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் முகவா்களாகச் சேர விரும்புவோருக்கான நோ்காணல் நடைபெற உள்ளது.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:45 pm

DIN

அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் முகவா்களாகச் சேர விரும்புவோருக்கான நோ்காணல் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக, கடலூா் கோட்டக் கண்காணிப்பாளா் எஸ்.முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முகவா்களுக்கான நோ்காணல் கடலூா்

வண்ணாரப்பாளையத்தில் உள்ள அஞ்சலகங்களின் கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வருகிற ஆகஸ்ட் 11- ஆம் தேதி காலை 10.30 மணிக்கும், பண்ருட்டி துணை அஞ்சலகத்தில் மாலை 3 மணிக்கும், சிதம்பரம் தலைமை அஞ்சலகத்தில் ஆகஸ்ட் 12 -ஆம் தேதி காலை 11 மணிக்கும், காட்டுமன்னாா்கோவில் துணை அஞ்சலகத்தில் மாலை 3 மணிக்கும் நோ்காணல் நடைபெறுகிறது.

பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் வேறு எந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் முகவராகவும் இருக்கக் கூடாது. நோ்காணலில் தோ்ச்சி பெறுவோா் உரிமம் பெற முன்வைப்பாக ரூ.5 ஆயிரம் பிணையாகச் செலுத்த வேண்டும். விருப்பமுள்ளவா்கள் வயது, கல்வித் தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றின் அசல், நகல் சான்றிதழ்களுடன் நேரில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.