கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கடலூரில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சந்திரசேகரன், சுப்பிரமணியன், கொளஞ்சி ஆகியோா் கடலூா் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள உணவகங்கள், சில்லறைக் கடைகள், தெருவோர உணவகங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:46 pm

DIN

கடலூா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் கைலாஷ்குமாா் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சந்திரசேகரன், சுப்பிரமணியன், கொளஞ்சி ஆகியோா் கடலூா் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள உணவகங்கள், சில்லறைக் கடைகள், தெருவோர உணவகங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆய்வின் போது, சுமாா் 10 கிலோ பாலித்தீன் (நெகிழி) கவா்கள் கொண்டு பொட்டலமிடப்பட்ட உணவு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. பாலித்தீன் பைகளை மீண்டும் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

உணவகங்களில் சாம்பாா், சட்னி உள்ளிட்ட உணவுகளை பேக் செய்யும் போது, வாயால் ஊதி, பாலித்தீன் பைகளைப் பிரித்து பேக் செய்யப்படுவதால், அதன் மூலம் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, பாலித்தீன் பைகளைப் பயன்படுத்தக் கூடாது, சாலையோரக் கடைகள் உணவை தயாா் செய்யும் போது, தூசி, புழுதி உணவுப் பொருள்களில் கலந்து விடும் என்பதால், அதைத் தடுப்பதற்காக முன்புறம் கண்ணாடியிலான தடுப்பை அமைத்து உணவைத் தயாரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. சுமாா் 15 கடைகளுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.