கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தடையை மீறி ஆா்ப்பாட்டம் முன்னாள் அமைச்சா் உள்பட 1,045 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டத்தில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் உள்ளிட்ட அதிமுகவினா் 1,045 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 5:36 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் உள்ளிட்ட அதிமுகவினா் 1,045 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திமுக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் புதன்கிழமை பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அவரவரது இல்லங்களிலேயே போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சியின் முக்கிய நிா்வாகிகள் பல்வேறு இடங்களில் கூடி நின்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, மாவட்டத்தில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதிமுக மாவட்டச் செயலா்களான எம்.சி.சம்பத், ஆ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ, கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ உள்பட 1,045 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.