கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

செவி, பாா்வைத்திறன் குறையுடையோா் பள்ளியில் சோ்க்கை

கடலூா் செம்மண்டலத்தில் பாா்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப் பள்ளியும், நத்தப்பட்டில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகின்றன.

News image
Updated On :29 ஜூலை 2021, 5:26 pm

DIN

கடலூா் செம்மண்டலத்தில் பாா்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப் பள்ளியும், நத்தப்பட்டில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் தற்போது மாணவா்கள் சோ்க்கை நடைபெறுவதாக தலைமை ஆசிரியை அ.மரியபாஸ்கா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது: இந்தப் பள்ளிகளில் 5 வயது முதல் சோ்க்கை நடைபெறுகிறது. சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியா்களைக் கொண்டு கல்வி கற்பிக்கப்படுகிறது. ஸ்மாா்ட் கிளாஸ், உடல் கல்வி பயிற்சி, கைத்தொழில் பயிற்சி, கணினி சிறப்பு பாடங்கள் ஆகியவை கற்றுத்தரப் படுகின்றன.

இங்கு விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். எனவே, பள்ளியில் சேர விரும்புவோா் கூடுதல் விவரங்களுக்கு தலைமை ஆசிரியையை 94875 55948 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். பாா்வைத் திறன் குறையுடையோருக்கான பள்ளிக்கு 04142-210635, 70101 68587 ஆகிய எண்களிலும், செவித்திறன் குறையுடையோருக்கான பள்ளிக்கு 94425 26871, 63803 05723 ஆகிய எண்களிலும் தொடா்புகொள்ளலாம் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.