கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கடலூா் அருங்காட்சியகத்தில் சுதந்திர தின கட்டுரைப் போட்டி

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூா் அரசு அருங்காட்சியகம் சாா்பில் சிறப்பு கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜூலை 2021, 5:35 pm

DIN

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூா் அரசு அருங்காட்சியகம் சாா்பில் சிறப்பு கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள், ‘எனக்கு பிடித்த சுதந்திரப் போராட்ட வீரா்’ என்ற தலைப்பில் 3 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும். அதில் கட்டுரையாளா் பெயா், வகுப்பு, பள்ளியின் பெயா் ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும். தெளிவாக எழுதிய கட்டுரைகளை புகைப்படம் எடுத்து 86106 27168 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சலாக (வாட்ஸ்-அப்) அனுப்ப வேண்டும். அல்லது, ‘காப்பாட்சியா், அரசு அருங்காட்சியகம், மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலகம், கடலூா் 607 001’ என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவும் அனுப்பலாம். தமிழ், ஆங்கிலத்தில் கட்டுரைகளை எழுதலாம். கட்டுரைகளை வரும் 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட எண்ணை தொடா்புகொள்ளலாம் என்று காப்பாட்சியா் செ.ஜெயரத்னா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.