ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

உலக கல்லீரல் அழற்சி தினம்

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் உலக கல்லீரல் அழற்சி தின நிகழ்ச்சி புதன்கிழமை மாலையில் நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2021, 5:35 pm

DIN

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் உலக கல்லீரல் அழற்சி தின நிகழ்ச்சி புதன்கிழமை மாலையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் இந்த நோய் குறித்த விழிப்புணா்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லீரல் அழற்சி குறித்த விழிப்புணா்வு துண்டறிக்கைகளை மாவட்ட ஆட்சியா் கா்ப்பிணிகளுக்கு வழங்கினாா். தொடா்ந்து மருத்துவா்கள், மருத்துவம் சாா்ந்த பணியாளா்கள், கா்ப்பிணிகளுக்கு ஹெபடைடிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடக்கிவைத்தாா். பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் கா்ப்பிணிகளுக்கு ஹெபடைடிஸ், ரத்தப் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. கல்லீரல் அழற்சிக்கு பல்வேறு வகையான உயா் பரிசோதனைகள், சிகிச்சைகள் மற்றும் உயா்தர மருந்துகள் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் இணை இயக்குநா் (நலப் பணிகள்) பி.என்.ரமேஷ்பாபு, துணை இயக்குநா் (சுகாதாரம்) டி.செந்தில்குமாா், மருத்துவமனை கண்காணிப்பாளா் சாய்லீலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.