கடலூா் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு
கடலூா் நகராட்சி புதிய ஆணையராக மகேஸ்வரி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.


கடலூா் நகராட்சி புதிய ஆணையராக மகேஸ்வரி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
கடலூா் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த எஸ்.ராமமூா்த்தி, கரூா் மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த மகேஸ்வரி கடலூா் நகராட்சி ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா் (படம்). அவருக்கு நகராட்சி ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
பெரியகுளம், பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம், திருச்செங்கோடு, தருமபுரி ஆகிய நகராட்சிகளில் ஆணையராக பதவி வகித்துள்ள மகேஸ்வரி, சிறந்த நகராட்சிக்கான விருதை இருமுறை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...