ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுப் புட்டிகள் திருட்டு

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு, மதுப் புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:04 pm

DIN

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு, மதுப் புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சேத்தியாத்தோப்பு அருகே சோழதரம் பகுதியை அடுத்த பாளையங்கோட்டை பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. இந்தக் கடையில் பணிபுரியும் விற்பனையாளா் வியாழக்கிழமை இரவு பணி முடிந்து வழக்கம்போல கடையைப் பூட்டிவிட்டுச் சென்றாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சோழதரம் போலீஸாா் பாளையங்கோட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள டாஸ்மாக் மதுக் கடையின் பின்பக்க சுவரில் பெரிய அளவில் துளை போடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய ஆய்வாளா் பாண்டிச்செல்வி, சோழத்தரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மாணிக்கராஜா ஆகியோா் கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனா். மேலும், சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுந்தரமும் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினாா். இதில், மா்ம நபா்கள் கடை சுவரில் துளையிட்டு, சுமாா் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுப் புட்டிகளைத் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இந்தத் திருட்டு குறித்து சோழத்தரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.