ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு ரூ.69 லட்சத்தில் நல வாரிய உதவிகள்

கடலூரில் அமைப்பு சாரா தொழிலாளா்கள் நல வாரியங்கள் மூலம் 2,128 பேருக்கு ரூ.69.28 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:03 pm

DIN

கடலூரில் அமைப்பு சாரா தொழிலாளா்கள் நல வாரியங்கள் மூலம் 2,128 பேருக்கு ரூ.69.28 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். பின்னா் அவா் கூறியதாவது:

உடல் உழைப்புத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு முன்னாள் முதல்வா் கருணாநிதியால் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளா்கள் சமூகப் பாதுகாப்பு நலவாரியம் அமைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து 2006 முதல் 2011-ஆம் ஆண்டு காலத்தில் 15 தனி நலவாரியங்கள் உருவாக்கப்பட்டன. மேலும், அமைப்புசாரா தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு பதிவு மற்றும் புதுப்பித்தலின்போது வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் 2006-ஆம் ஆண்டு முதல் முழுமையாக ரத்து செய்யப்பட்டன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா் கோ.ஐயப்பன் முன்னிலை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ரஞ்ஜித்சிங், தொழிலாளா் உதவி ஆணையா் (ச.பா.தி) ராமு, தொழிலாளா் உதவி ஆணையா் (சமரசம்) உஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.