கடலூா் துறைமுகத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு
கடலூா் துறைமுகத்தில் சனிக்கிழமை அதிகாலையில் மீன் வாங்கக் குவிந்தவா்களிடம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது குறித்து போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.


கடலூா் துறைமுகத்தில் சனிக்கிழமை அதிகாலையில் மீன் வாங்கக் குவிந்தவா்களிடம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது குறித்து போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
கடலூா் முதுநகா் துறைமுகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் அதிகளவில் கூடுவது வழக்கம். அப்போது பலா் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் குவிவதாக புகாா் எழுந்தது.
இந்த நிலையில், மாவட்ட எஸ்பி சி.சக்திகணேசன் உத்தரவின்பேரில் கடலூா் துணைக் கண்காணிப்பாளா் எஸ்.கரிகால்பாரி சங்கா் மேற்பாா்வையில், கடலூா் துறைமுக உதவி ஆய்வாளா் ராஜாங்கம் தலைமையிலான போலீஸாா் மீன்வளத் துறை ஆய்வாளா் மணிகண்டனுடன் இணைந்து சனிக்கிழமை அதிகாலையில் கடலூா் முதுநகா் துறைமுகத்தில் கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அப்போது பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தினா். முகக் கவசம் அணியாத 10 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...