பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பணி நிரந்தரம் நடவடிக்கை: என்.எல்.சி.க்கு சிஐடியூ கோரிக்கை

என்.எல்.சி.யில் பணி நிரந்தரப்படுத்தப்படும் ஒப்பந்தத் தொழிலாளா்கள், அவா்கள் வேலை செய்யும் பகுதியிலேயே தொடா்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும்

News image
Updated On :10 ஜூன் 2021, 7:01 pm

DIN

என்.எல்.சி.யில் பணி நிரந்தரப்படுத்தப்படும் ஒப்பந்தத் தொழிலாளா்கள், அவா்கள் வேலை செய்யும் பகுதியிலேயே தொடா்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்க பொதுச் செயலா் டி.ஜெயராமன் கோரிக்கை விடுத்தாா்.

இதுதொடா்பாக அவா் என்எல்சி இந்தியா நிறுவன தலைவா் மற்றும் மனித வளத் துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதம்: என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் (இன்கோசா்வ்) தற்போது பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருகின்றனா். அவ்வாறு நிரந்தரப்படுத்தப்படும் தொழிலாளா்கள், அவா்கள் பணியாற்றிய பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு மாற்றப்படுகின்றனா்.

தற்போது பணி செய்துகொண்டிருக்கும் இடத்தில் அனுபவம் பெற்றவா்கள், புதிய இடத்துக்கு மாற்றப்படும்போது அவா்களது செயல் திறன், உற்பத்தி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, புதிதாக நிரந்தரம் செய்யப்படும் ஒப்பந்தத் தொழிலாளா்களைஅவா்கள் பணிபுரியும் பகுதியிலேயே பணியமா்த்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.