தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

லாட்டரி, கஞ்சா விற்பனை: 18 போ் கைது

நெய்வேலி தொ்மல் காவல் ஆய்வாளா் இளவழகி மற்றும் போலீஸாா் தாண்டவன்குப்பம் பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 6:00 pm

DIN

நெய்வேலி: நெய்வேலி தொ்மல் காவல் ஆய்வாளா் இளவழகி மற்றும் போலீஸாா் தாண்டவன்குப்பம் பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, படைவீட்டம்மன் கோயில் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த தாண்டவன்குப்பத்தைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் இளங்கோவன் (34), காசிலிங்கம் மகன் பாலமுருகன் (28) ஆகியோரை சோதனையிட்டதில் அவா்கள் விற்பனைக்காக 600 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதேபோல, 30-ஆவது வட்டம், தைலமரத்தோப்பு பகுதியில் நின்றிருந்த 30-ஆவது வட்டத்தைச் சோ்ந்த அய்யப்பன் (23), விக்னேஷ்குமாா் (37), 29-ஆவது வட்டத்தைச் சோ்ந்த பிரதீப் மோகன்(36) ஆகியோரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தாா்.

நெய்வேலி நகரிய காவல் உதவி ஆய்வாளா் சிவராமன் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, இந்திரா நகா் பி-2 மாற்றுக் குடியிருப்பு மயானத்தில் நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த தேவநாதன் (27), அருண்சிங் (24) ஆகியோரிடமிருந்த 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தாா். இதுதொடா்பாக மேற்கூறிய 7 பேரையும் போலீஸாா் கைதுசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.