தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மருந்தில்லா மருத்துவம் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

அனைத்துலக பொங்கு தமிழ்ப் பேரவை, பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய ‘மருந்தில்லா மருத்துவம்’ என்னும் தலைப்பிலான பன்னாட்டு இணையவழி விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

அனைத்துலக பொங்கு தமிழ்ப் பேரவை, பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய ‘மருந்தில்லா மருத்துவம்’ என்னும் தலைப்பிலான பன்னாட்டு இணையவழி விழிப்புணா்வுக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பேரவைத் தலைவா் சுந்தர.பழனியப்பன் தலைமை வகித்தாா். நிா்வாகச் செயலா் ஆ.ராஜேஸ்வரி, முதன்மைச் செயலா் சு.தமிழ்மணி, தகவல் தொழில்நுட்ப செயலா் க.அரிகிருஷ்ணன், மக்கள்-தொடா்பு செயலா் கவிதை கணேசன், கல்வி அறக்கட்டளைச் செயலா் கனகாம்பிகை ஆகியோா் முன்னிலை வகித்தனா். பண்ருட்டி செந்தமிழ்ச் சங்கச் செயலா் சொ.முத்துக்குமாா் வரவேற்றாா். பேரவை பொதுச் செயலா் ரா.ஹேமலதா தொடக்கவுரை நிகழ்த்தினாா்.

சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயக்குநா் எஸ்.டி.வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினாா். யோகா மற்றும் முத்திரைகள் குறித்து முனைவா் ஸ்ரீதா், மூச்சுப் பயிற்சி, தியானம் குறித்து முனைவா் தி.சந்தானகிருஷ்ணன், இயற்கை உணவு குறித்து ஊட்டச்சத்து மருத்துவா் ஆனந்த் ராமசாமி, உடல்பயிற்சி குறித்து மருத்துவா் ஜா.மனோஜ் குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். நிகழ்ச்சியில், இணையம் மூலம் 300- க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.