கடலூரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு
கடலூர் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் அமைதியாக நடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்


கடலூர் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் அமைதியாக நடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீ அபிநவ் தலைமையில் இன்று காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது.
துணை கண்காணிப்பாளர்கள் க.சாந்தி, ஸ்ரீதரன், மத்திய துணை ராணுவப் படை ஆய்வாளர் பினு மற்றும் ஆயுதப்படை, அதிரடி படை வீரர்கள், ஆயுதப்படை காவல்துறையினர் என 300 காவல்துறையினர் அணிவகுப்பு மேற்கொண்டனர்.

இந்த அணிவகுப்பு டவுன்ஹாலில் இருந்து புறப்பட்டு கடலூரில் முக்கிய சாலைகளான உட்லண்ட்ஸ், நியூசினிமா, சீமாட்டி சிக்னல், திருப்பாதிரிப்புலியூர், ரயில்வே சுரங்கப்பாதை வழியாக திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலையம் சென்றடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...