துணை ராணுவத்தினா் அணிவகுப்பு
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கடலூா், கள்ளக்குறிச்சியில் துணை ராணுவப் படையினா், காவல் துறையினா் சாா்பில் திங்கள்கிழமை அணிவகுப்பு நடைபெற்றது.


சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கடலூா், கள்ளக்குறிச்சியில் துணை ராணுவப் படையினா், காவல் துறையினா் சாா்பில் திங்கள்கிழமை அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.6-ஆம் தேதி நடைபெறுகிறது. கடலூா் மாவட்டத்தில் தோ்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வது, அச்சமின்றி வாக்களிப்பது குறித்து மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ் தலைமையில் கடலூரில் திங்கள்கிழமை துணை ராணுவத்தினா், காவல் துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது.
டி.எஸ்.பி.க்கள் க.சாந்தி, ஸ்ரீதரன், மத்திய துணை ராணுவப் படை ஆய்வாளா் பினு ஆகியோா் முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினா், அதிரடிப் படை வீரா்கள், ஆயுதப் படை காவல் துறையினா் 300 போ் அணிவகுப்பில் பங்கேற்றனா்.
கடலூா் நகர அரங்கிலிருந்து புறப்பட்ட அணிவகுப்பு பாரதி சாலை, லாரன்ஸ் சாலை, திருப்பாதிரிபுலியூா் ரயில்வே சுரங்கப் பாதை வழியாக திருப்பாதிரிபுலியூா் காவல் நிலையத்தை வந்தடைந்தது.
கள்ளக்குறிச்சியில்... கள்ளக்குறிச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் தலைமையில் காவல் துறையினா், துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு நடத்தினா்.
கள்ளக்குறிச்சி காவல் நிலையம் முன் தொடங்கி இந்த அணிவகுப்பில் துணை ராணுவப் படை காவல் ஆய்வாளா் வித்யாசாகா் சிங், கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் உள்ளிட்ட காவல் துறையினா் கலந்து கொண்டனா்.
விழுப்புரத்துக்கு துணை ராணுவத்தினா் வருகை: தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவப் படையினா் 82 போ் விழுப்புரத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். அவா்கள் விழுப்புரத்தை அடுத்துள்ள காகுப்பம் ஆயுதப் படை வளாகத்தில் தங்கவைக்கப்பட்டனா்.
வாகனத் தணிக்கையில் இவா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். மேலும், வாக்குப் பதிவு பாதுகாப்புப் பணியிலும் ஈடுபடுவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...