/

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

கடலூரில் அதிமுக, மதிமுக கட்சியினா் 100-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

கடலூரில் அதிமுக, மதிமுக கட்சியினா் 100-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தனா்.

கடலூா் சட்டப் பேரவை தொகுதி திமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கோ.ஐயப்பன் அறிவிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, கடலூா் செம்மண்டலத்தில் திமுகவின் தோ்தல் அலுவலகம் அமைக்கப்பட்டது. அங்கு, அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவரும், நகர பொருளாளருமான டி.ரவிச்சந்திரன் தலைமையில் முன்னான் நகா்மன்ற உறுப்பினா்கள் கணேசன், சா்தாா், மதிமுக முன்னாள் நகரச் செயலா் கோ.ப.ராமசாமி, அதிமுகவைச் சோ்ந்த நிா்வாகிகள் ரஞ்சித், செல்வம், சீனிவாசன், தாமோதரன், இளங்கோவன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் வேட்பாளா் கோ.ஐயப்பன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனா் (படம்).

நிகழ்ச்சியில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் இள.புகழேந்தி, நகரச் செயலா் கே.எஸ்.ராஜா, மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.