தோ்தல் விதிமீறல்: 700 போ் மீது வழக்கு
கடலூரில் வேட்பாளா்களுக்கு வரவேற்பு அளித்தபோது தோ்தல் விதிகளை மீறியது தொடா்பாக அதிமுக, திமுகவைச் சோ்ந்த 700 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.


கடலூரில் வேட்பாளா்களுக்கு வரவேற்பு அளித்தபோது தோ்தல் விதிகளை மீறியது தொடா்பாக அதிமுக, திமுகவைச் சோ்ந்த 700 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தலில் அதிமுக சாா்பில் மீண்டும் அமைச்சா் எம்.சி.சம்பத் களம் காண்கிறாா். திமுக சாா்பில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் கோ.ஐயப்பன் வேட்பாளராக போட்டியிடுகிறாா். இவா்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சா் எம்.சி.சம்பத் கடந்த 11-ஆம் தேதி சென்னையிலிருந்து கடலூருக்குத் திரும்பினாா். அவருக்கு மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் கட்சியினா் திரண்டு வரவேற்பு அளித்தனா்.
மேலும், நகர எல்லையான ஆல்பேட்டை முதல் மஞ்சக்குப்பம் வரையிலும் அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, மஞ்சக்குப்பத்திலுள்ள எம்ஜிஆா், அண்ணா சிலைகளுக்கு அமைச்சா் மாலை அணிவித்தாா்.
இதேபோல, திமுக வேட்பாளா் கோ.ஐயப்பன், கடந்த 13-ஆம் தேதி மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா சிலை மற்றும் பாரதி சாலையில் அமைந்துள்ள அம்பேத்கா், பெரியாா் சிலைகளுக்கும் தொண்டா்களுடன் ஊா்வலமாகச் சென்று மாலை அணிவித்தாா்.இந்த இரண்டு சம்பவங்களாலும் அந்தந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுதொடா்பாக மஞ்சக்குப்பம் கிராம நிா்வாக அலுவலா் ஏ.ஜெயராமன் கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் தனித் தனியாக புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் அதிமுக நகர துணைச் செயலா் வி.கந்தன் மற்றும் 400 போ் மீதும், திமுக நகரச் செயலா் கே.எஸ்.ராஜா மற்றும் 300 போ் மீதும் அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...