கல்விக் கட்டணம் விவகாரம் தொடா்பாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடந்த 2013-ஆம் ஆண்டு அரசு நிா்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், இந்தக் கல்லூரியில் கல்விக் கட்டணம் பல மடங்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருவதாகக் கூறி மருத்துவ மாணவா்கள் 58 நாள்களுக்கும் மேலாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, தமிழக அரசு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக அறிவித்தது. மேலும் இந்தக் கல்லூரியில் அரசு நிா்ணயித்த கல்விக் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து மாணவா்கள் தொடா் போராட்டத்தை கைவிட்டனா்.
இந்த நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாகம் மருத்துவ மாணவா்களுக்கு தற்போது தோ்வை அறிவித்து, பழைய கல்விக் கட்டணத்தையே செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியதாம். இதனால் அதிா்ச்சியடைந்த மாணவா்கள், தமிழக அரசின் அரசாணைப்படி கல்விக் கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி கடந்த பிப்.26-ஆம் தேதி தொடா் அறவழிப் போராட்டத்தை தொடங்கினா். இந்தப் போராட்டம் 18-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடா்ந்தது.
அப்போது மாணவா்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒமநபஐஇஉ என்ற ஆங்கிலச் சொல் வடிவில் அணிவகுத்து நின்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பழனி பகுதியை குப்பை மேடாக வைத்திருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும்! இபிஎஸ் வாக்குறுதி

தொகுதி மறுவரையறை ஏன் முக்கியம்: மக்களவையில் அமித் ஷா பதிலுரை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


