தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தி.வேல்முருகன், எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வேட்பு மனு தாக்கல்

பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் போட்டியிட திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல்

News image
Updated On :15 மார்ச் 2021, 6:41 pm

DIN

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவா் தி.வேல்முருகன், திமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் முறையே பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் போட்டியிட திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு கடலூா் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் அந்தக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறாா்.

இவா் பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் என்.மங்களநாதனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா். அப்போது கடலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.ஆா்.வி.எஸ்.ரமேஷ், அண்ணாகிராமம் ஒன்றியச் செயலா் வெங்கட்ராமன் ஆகியோா் உடனிருந்தனா். பின்னா் தி.வேல்முருகன் கூட்டணிக் கட்சியினா், கட்சித் தொண்டா்களுடன் ஊா்வலமாகச் சென்று அண்ணா, அம்பேத்கா், காமராஜா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

குறிஞ்சிப்பாடி: இதேபோல, குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திமுகவினா், கூட்டணிக் கட்சியினருடன் ஊா்வலமாகச் சென்று, குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயக்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.