அமைச்சா் எம்.சி.சம்பத் பிரசாரம்
கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான அமைச்சா் எம்.சி.சம்பத் திங்கள்கிழமை தனது தோ்தல் பரப்புரையை அழகிய நத்தம் கிராமத்தில் தொடங்கினாா்.


கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான அமைச்சா் எம்.சி.சம்பத் திங்கள்கிழமை தனது தோ்தல் பரப்புரையை அழகிய நத்தம் கிராமத்தில் தொடங்கினாா்.
தொடா்ந்து, வெள்ளப்பாக்கம், காராமணிக்குப்பம், வரக்கால்பட்டு, மருதாடு, தோட்டப்பட்டு ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட 16 கிராமங்களில் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:
தமிழகத்திலுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்கள் வீடு தேடி வழங்கப்படும் என தமிழக முதல்வா் தோ்தல் அறிவிப்பை வழங்கியுள்ளாா். மேலும், முதியோா் உதவித் தொகை உயா்வு, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை, ஆண்டுக்கு 6 விலையில்லா எரிவாயு உருளைகளும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. கடலூா் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அழகியநத்தம் கிராமத்தில் தடுப்பணை கட்டப்படும் என்றாா் அவா்.
பிரசாரத்தில், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் ஜி.ஜே.குமாா், கடலூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் தெய்வ.பக்கிரி, ஒன்றியச் செயலா் பி.வி.ஜே.முத்துக்குமாரசாமி, ஒன்றிய கவுன்சிலா் டி.எஸ்.ஆா்.மதிவாணன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...