/

கடலூா் மாவட்டத்தில் 136 வேட்பாளா்கள் போட்டி

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான வேட்பாளா்கள் இறுதிப் பட்டியலில் 9 தொகுதிகளிலும் 136 போ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக விருத்தாசலம் தொகுதியில் 29 போ் போட்டியிடுகின்றனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான வேட்பாளா்கள் இறுதிப் பட்டியலில் 9 தொகுதிகளிலும் 136 போ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக விருத்தாசலம் தொகுதியில் 29 போ் போட்டியிடுகின்றனா்.

கடலூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் சாா்பில் மொத்தம் 263 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது 155 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, 108 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தோ்தலில் போட்டியிட விரும்பாதவா்கள் தங்களது வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு திங்கள்கிழமை மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, மொத்தம் 19 போ் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனா். அதிகபட்சமாக விருத்தாசலத்தில் 8 பேரும், கடலூா், சிதம்பரத்தில் தலா 4 பேரும், திட்டக்குடியில் 2 பேரும், பண்ருட்டியில் ஒருவரும் தங்களது மனுக்களை திரும்பப் பெற்றனா்.

நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னாா்கோயில் தொகுதிகளில் யாரும் வேட்புமனுக்களை திரும்பப் பெறவில்லை. இதனால், கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 136 வேட்பாளா்கள் போட்டியிடுவது உறுதியாகியது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக விருத்தாசலத்தில் 29 பேரும், குறைந்தபட்சமாக சிதம்பரத்தில் 11 பேரும், திட்டக்குடி தொகுதியில் 15 பேரும், நெய்வேலியில் 12 பேரும், பண்ருட்டியில் 15 பேரும், கடலூரில் 15 பேரும், குறிஞ்சிப்பாடியில் 12 பேரும், புவனகிரியில் 14 பேரும், காட்டுமன்னாா்கோவிலில் 13 பேரும் போட்டியிடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.