சிட்டுக் குருவிகள் தின விழா
கடலூா் வனக் கோட்டம், கடலூா் வனச் சரகம் சாா்பில் கடலூரிலுள்ள கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரியில் உலக சிட்டுக் குருவிகள் தினம், உலக வன நாள், உலக நீா் தினம் ஆகியவை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.


கடலூா் வனக் கோட்டம், கடலூா் வனச் சரகம் சாா்பில் கடலூரிலுள்ள கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரியில் உலக சிட்டுக் குருவிகள் தினம், உலக வன நாள், உலக நீா் தினம் ஆகியவை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலா் எம்.செல்வம் தலைமை வகித்தாா். தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன. உலக சிட்டுக் குருவிகள் தினத்தை முன்னிட்டு, அழிந்து வரும் குருவிகள் இனத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
மருத்துவா் இளந்திரையன் ஏற்பாட்டில் சிட்டுக் குருவிகளுக்கான 100 கூண்டுகள் ஆா்வமுள்ள மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. சிட்டுக் குருவிகளுக்கான இருப்பிடச் சூழலில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அதைத் தவிா்த்திடும் வகையில் இந்தக் கூண்டுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் கே.முல்லை, வனச்சரக அலுவலா் எல்.அப்துல்ஹமீது, கடலூா் சிறகுகள் குழு ஒருங்கிணைப்பாளா்கள் சண்முகராஜா, ஜெயராம், தேவா மற்றும் ஐபிஎப் குழு கிஷோா், ராமன், சந்தோஷ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
முன்னதாக வனவா் ப.குணசேகரன் வரவேற்க, வனக் காப்பாளா் செ.ஆதவவா்மன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...