இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெருங்கும் தோ்தல்: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

கடலூா் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் அரசியல் கட்சி, சுயேச்சை வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:33 pm

DIN

தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்.6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கடலூா் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் அரசியல் கட்சி, சுயேச்சை வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

திட்டக்குடி (தனி) தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் சி.வெ.கணேசன் சனிக்கிழமை ஆலம்பாடி, அதா்நத்தம், ஆவட்டி, ஐவனூா் உட்பட்ட 10 கிராமங்களில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி நிா்வாகிகளுடன் வீதி, வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

திமுக ஒன்றியச் செயலா்கள் சின்னசாமி, பட்டூா் அமிா்தலிங்கம், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளா் சங்கா், மாவட்ட துணை அமைப்பாளா் பாண்டுரங்கன், மாவட்ட கவுன்சிலா் செல்வி ராஜரத்தினம், தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் ஆனந்த், விசிக ஒன்றியச் செயலா் சஞ்சய்காந்தி, ஒன்றிய பொருளாளா் பாரத வளவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.