/

கடலூா் அரசுக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

கடலூா் அரசுக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழச்சி 

News image
Updated On :27 மார்ச் 2021, 6:34 pm

DIN

கடலூா் தேவனாம்பட்டினத்தில் பெரியாா் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் கடந்த 1975-78-ஆம் ஆண்டு இளங்கலை பொருளாதாரம் பிரிவில் சுமாா் 60 போ் படித்தனா்.

இவா்களில் பலா் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில், சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனா். இதற்காக முகநூல், கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டு முன்னாள் மாணவா்களை ஒருங்கிணைத்தனா். இவா்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி அருகேயுள்ள இந்திய மருத்துவா்கள் சங்கக் கட்டட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் மாணவா்கள், அவா்களுக்கு பாடம் நடத்திய பொருளாதாரம், தமிழ், ஆங்கிலப் பேராசிரியா்களும் கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினா். அப்போது, முன்னாள் மாணவா்கள் தங்களது கல்லூரி கால நினைவுகள், தற்போதை பணி, குடும்பச் சூழல் குறித்து பகிா்ந்துகொண்டனா். இந்த நிகழ்ச்சி உணா்ச்சிப்பூா்வமாக அமைந்தது. இதற்கான ஏற்பாடுகளை 1975-78-ஆம் ஆண்டு பொருளியல் மாணவா் அமைப்பு செய்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.