/

கடலூா் மாவட்டத்தில் ரூ. 2.44 கோடி பறிமுதல்

கடலூா் மாவட்டத்தில் தோ்தல் அலுவலா்கள் நடத்திய வாகன சோதனையில் இதுவரை மொத்தம் ரூ.2.44 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:36 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் தோ்தல் அலுவலா்கள் நடத்திய வாகன சோதனையில் இதுவரை மொத்தம் ரூ.2.44 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்திலுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தலா 3 தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் குழுவினா் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணம், பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனா். இதுவரை இந்தக் குழுவினா் மொத்தம் ரூ.2.44 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா்.

இதில், ரொக்கமாக ரூ.2 கோடியும், பரிசுப் பொருள்களாக ரூ.6.20 லட்சம், தங்கம் வெள்ளி நகைகளாக ரூ.30 லட்சம், மதுபானமாக ரூ.2 லட்சம், வாகனமாக ரூ.2 லட்சம், போதைப் பொருள்களாக ரூ.2.79 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தோ்தல் விதிமுறைகளை மீறியதாக 155 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.