/

தேசிய ஜனநாயக மக்கள் கட்சி அதிமுக கூட்டணிக்கு ஆதரவு

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதென தேசிய ஜனநாயக மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:31 pm

DIN

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதென தேசிய ஜனநாயக மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

இந்தக் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் திட்டக்குடி அருகேயுள்ள ஐவதுகுடியில் நிறுவனத் தலைவா் மு.கதிா்வேல் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில், துணைத் தலைவா் இளையகுமாா், மாநில பொதுச் செயலா் செந்தில், செயலா் ஆறுமுகம், நிா்வாகிகள் தனவேல், சுப்பிரமணி, ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது, அதன்படி, கடலூா், புவனகிரி, சிதம்பரம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னாா்கோவில் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள், விருத்தாசலம், நெய்வேலி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா்கள், திட்டக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவதென முடிவெடுக்கப்பட்டது.

வள்ளலாா் ஜோதி தரிசன தினத்தை அரசு விழாவாக அறிவித்தது, விவசாயக் கடன் தள்ளுபடி, பஞ்சமி நில மீட்புக்காக அரசாணை வெளியீடு, விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கியது ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றியதற்காக அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவதென கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.