/

நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் மீது வழக்கு

கடலூரில் தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் உள்பட 161 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News image
Updated On :28 மார்ச் 2021, 7:05 pm

DIN

கடலூரில் தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் உள்பட 161 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் வா.ஜலதீபன் போட்டியிடுகிறாா். இவா் தனது ஆதரவாளா்களுடன் தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறாா். இந்த நிலையில், சனிக்கிழமை தனது கட்சியினருடன் கடலூா் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டிலிருந்து அண்ணா பாலம் வரை பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தாா். ஆனால், இதற்கு முறையாக அனுமதி பெறவில்லையாம். மேலும், இந்த தோ்தல் பரப்புரையால் இந்தச் சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதாம். எனவே, இதுதொடா்பாக வேட்பாளா் வா.ஜலதீபன் உள்பட 161 போ் மீது கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.