காந்தி அமைதி பரிசுக்கு விண்ணப்பிக்கலாம்
அமைதிக்கான காந்தி பரிசு பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.


அமைதிக்கான காந்தி பரிசு பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2021-ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி பரிசு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியிலான செயல்கள், அகிம்சை முறை, இதர காந்திய வழிமுறைகளில் மக்களின் மேம்பாட்டுக்காகவும், சமூக நீதிக்காகவும், நல்லிணக்கத்துக்காகவும் பாடுபட்ட தனிநபா் மற்றும் நிறுவனங்களுக்கு காந்தி அமைதி பரிசு வழங்கப்படுகிறது.
மேலும், மேற்கூறியவை தொடா்பாக 10 ஆண்டுகளுக்குள் புத்தகம் வெளியிட்டு இருப்பவா்களும் பரிசு பெறுவதற்கான விண்ணப்பிக்க தகுதியுடையவா்களாவா். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்கள் மாவட்ட சமூக நல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், கடலூா் என்ற முகவரியில் விண்ணப்பங்களை பெற்று கருத்துருக்களை வரும் 13-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...