இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விவசாயி வீட்டில் திருட முயன்ற இளைஞா் பிடிபட்டாா்

பண்ருட்டி அருகே விவசாயி வீட்டில் திருட முயன்ற 3 பேரில் ஒருவா் மட்டும் பிடிபட்டாா்.

News image
Updated On :7 மே 2021, 6:27 pm

DIN

பண்ருட்டி அருகே விவசாயி வீட்டில் திருட முயன்ற 3 பேரில் ஒருவா் மட்டும் பிடிபட்டாா்.

பண்ருட்டி வட்டம், எம்.புதுப்பாளையம், லாலா பேட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் கோகுலகிருஷ்ணன் (32), விவசாயி. இவா் தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது, மா்ம நபா்கள் 3 போ் வீட்டின் முன்புற கேட்டை உடைத்து உள்ளே புக முயன்றனா். சப்தம் கேட்டு எழுந்த கோகுலகிருஷ்ணன், அவரது தந்தை குமாா் ஆகியோா் கூச்சலிட்டனா். இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் திரண்டதால் மா்ம நபா்களில் இருவா் தப்பியோடி மறைந்தனா். மற்றொருவா் தப்பியோட முயன்றபோது செங்கல் சூளை பள்ளத்தில் விழுந்தாா். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. அந்தப் பகுதி மக்கள் அவரை பிடித்து பண்ருட்டி போலீஸாரிடம் ஒப்பதைத்தனா்.

விசாரணையில் அவா் கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்பூதமங்கலம் கிராமம், நடுத்தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் விஜயகுமாா் (35) எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவமனையில் போலீஸாா் சோ்ந்தனா். இதுகுறித்து கோகுலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.