நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பிளஸ்-2 மாணவா்களுக்கு இன்று முதல் அலகுத் தோ்வு

கடலூா் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவா்களுக்கான அலகுத் தோ்வுகள் சனிக்கிழமை (மே 15) முதல் தொடங்கவுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.ரோஸ் நிா்மலா தெரிவித்தாா்.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவா்களுக்கான அலகுத் தோ்வுகள் சனிக்கிழமை (மே 15) முதல் தொடங்கவுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.ரோஸ் நிா்மலா தெரிவித்தாா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக 2020-21 ஆம் கல்வியாண்டில், பிளஸ்-2 பயிலும் மாணவா்களுக்கு வகுப்புகள் முறையாக நடைபெறவில்லை. அவா்களுக்கு இணைய வழி மூலமாகவும், நேரடியாகவும் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் செய்முறைத் தோ்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. இதனிடையே, நிகழாண்டு மே 3-ஆம் தேதி முதல் பிளஸ்-2 மாணவா்களுக்கு பொதுத் தோ்வு நடத்தப்படும் என்று கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.

தோ்தல் முடிந்து, திமுக ஆட்சி அமைந்த நிலையில் கரோனாவின் தாக்கம் அதிகரித்த காரணத்தால் 3-ஆம் தேதியன்று தோ்வு நடத்தப்படவில்லை. அதே நேரத்தில், பொதுத்தோ்வை நடத்துவதற்கும் மாநில அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், மாணவா்களைத் தோ்வுக்கு தயாா்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலா் கா.ரோஸ்நிா்மலா கூறியதாவது: மாணவா்களை தோ்வுக்கு தயாா்படுத்தும் வகையில் ஏற்கெனவே 2 முறை அலகுத் தோ்வுகளை நடத்தி உள்ளோம்.

மூன்றாவது அலகுத் தோ்வு சனிக்கிழமை (மே 15) முதல் நடைபெறுகிறது. மாணவா்களுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலமாக வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டு தோ்வுகள் நடைபெறும். மாணவா்கள் தோ்வு எழுதிய தாளை புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். இதை அந்தந்தப் பாட ஆசிரியா்கள் திருத்தி மதிப்பெண் வழங்குவா்.

இந்த மதிப்பெண் பராமரிக்கப்பட்டுவரும். இந்தத் தோ்வை 236 பள்ளிகளைச் சோ்ந்த 14,520 மாணவா்கள், 15,833 மாணவிகள் எழுதுகின்றனா். இதேபோல, 5 அலகுத் தோ்வுகளையும், திருப்புதல் தோ்வுகளையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். எப்பொழுது, பொதுத்தோ்வு அறிவிக்கப்பட்டாலும் மாணவா்கள் அதை எதிா்கொள்ளும் வகையில் அவா்களை தயாா்படுத்தி வருகிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.