பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நிலம் எடுப்பு அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்

நெய்வேலி அருகே நிலம் எடுப்பு அதிகாரிகளை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

நெய்வேலி அருகே நிலம் எடுப்பு அதிகாரிகளை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி இந்தியா நிறுவனம் பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக அருகே உள்ள கிராமங்களை கையகப்படுத்தி வருகிறது. இதன்படி, வானாதிராயபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட தென்குத்து கிராமத்தையும் கையகப்படுத்த முயற்சி செய்து வருகிறது. ஆனால், அந்தக் கிராம மக்கள் தங்களது நிலங்களை என்.எல்.சி.க்கு வழங்க விருப்பமில்லை என்றும், அந்த நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கினால் மட்டுமே நிலத்தை தர முடியும் என்றும் கூறி வருகின்றனா்.

இந்த நிலையில், மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) சிவக்குமாா், வட்டாட்சியா்கள் அந்தோணிராஜ், செந்தில், ரவி, கிராம நிா்வாக அலுவலா் வெங்கடேசன் ஆகியோா் என்.எல்.சி.க்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடா்பாக தென்குத்து கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். இதையறிந்த கிராம மக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சிவக்குமாா் கூறுகையில், கோரிக்கைகளை மனுவாக தரும்படியும், முத்தரப்புப் பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தாா். மேலும், வடலூா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி கிராம மக்களை சமரசம் செய்தனா். இதையடுத்து கிராம மக்கள் அதிகாரிகளை விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.