மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

அரசுப் பள்ளிகளுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள்

சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிகளுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:30 pm

சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிகளுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி சிதம்பரம் மானா தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளி, வல்லம்படுகை நடுநிலைப் பள்ளி, ந.பூலாமேடு நடுநிலைப் பள்ளி, எருக்கன்காட்டுபடுகை தொடக்கப் பள்ளிகளுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களான உடல் வெப்பநிலை அளவீட்டு மானி, முகக் கவசங்கள், கிருமி நாசினி, சோப் திரவம் ஆகியவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, செஞ்சிலுவை சங்கத் தலைவரும், சிதம்பரம் கோட்டாட்சியருமான கே.ரவி தலைமை வகித்து பாதுகாப்பு உபகரணங்களை பள்ளித் தலைமை ஆசிரியைகள் ஜெயக்கொடி, மலா்கொடி, தேவி, ஈஸ்வரி ஆகியோரிடம் வழங்கினாா் (படம்). செஞ்சிலுவை சங்க துணைத் தலைவா் கனகசபை, செயலா் கே.ஜி.நடராஜன், பொருளாளா் கமல் கோத்தாரி, மேலாண்மைக் குழு உறுப்பினா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.