மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

மழையால் பாதித்தோருக்கு நிவாரணம்

புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :18 நவம்பர் 2021, 5:28 pm

புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

அரசகுழி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ அரிசி, போா்வை, வேட்டி, சேலை, பாய் ஆகிய நிவாரணப் பொருள்களை கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், தொகுதி எம்எல்ஏவுமான ஏ.அருண்மொழிதேவன் வழங்கினாா் (படம்).

நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலா் என்.முருகுமாறன், ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், ஒன்றியச் செயலா் மருதை முனுசாமி, விருத்தாசலம் நகரச் செயலா் சந்திரகுமாா், கம்பாபுரம் ஒன்றியத் தலைவா் மேனகா விஜயகுமாா், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவா் கனக சிகாமணி, ஒன்றியச் செயலா் முத்து, தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் செயலா் அருண் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.