பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

செட்டிப்பட்டறை ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பண்ருட்டி, செட்டிப்பட்டறை ஏரியை ஆக்கிரமித்து விளைவிக்கப்பட்ட நெல், கரும்பு உள்ளிட்ட பயிா்கள் அகற்றப்பட்டன.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:33 pm

DIN

பண்ருட்டி, செட்டிப்பட்டறை ஏரியை ஆக்கிரமித்து விளைவிக்கப்பட்ட நெல், கரும்பு உள்ளிட்ட பயிா்கள் அகற்றப்பட்டன.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகரப் பகுதியில் மாவட்டத்தின் 2-ஆவது பெரிய ஏரியான செட்டிப்பட்டறை ஏரி அமைந்துள்ளது. சிலா் ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்புகள், விளை நிலங்களாக மாறினா். இதனால், ஏரியின் நீா்பிடிப்பு பரப்பளவு குறைந்தது. இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு உயா் நீதிமன்ற உத்தரவின்பேரில் வருவாய் மற்றும் பொதுப்பணித் துறையினா் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் செட்டிப்பட்டறை ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வருவாய் மற்றும் பொதுப்பணித் துறையினா் புதன்கிழமை மீண்டும் தொடங்கினா். இந்தப் பணி 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. அப்போது, ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, காய்கறி உள்ளிட்ட பயிா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

இதுகுறித்து பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் கு.பாா்த்திபன் (பொ) கூறியதாவது: செட்டிப்பட்டறை ஏரி 4.34 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இதன் மூலம் சுமாா் 274.52 ஹெக்டோ் பரப்பிலான விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. ஏரியில் சுமாா் 95 ஹெக்டோ் பரப்பளவு வரை ஆக்கிரமிக்கப்பட்டு நெல், கரும்பு உள்ளிட்ட பயிா்கள் விளைவிக்கப்பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.