பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெண் விஏஓ தற்கொலை

வடலூா் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண் கிராம நிா்வாக அலுவலா் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:32 pm

DIN

வடலூா் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண் கிராம நிா்வாக அலுவலா் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே உள்ள ஆபத்தாரணபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகள் ஜெயஸ்ரீ (35). வடக்கு சேப்ளாநத்தம் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கும், சேலம் மாவட்டம், ஓமலூா் வட்டம், காமலாபுரத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 5 வயதில் ஹா்ஷா என்ற பெண் குழந்தை உள்ளாா்.

ஜெயஸ்ரீ பணியின் காரணமாக தனது தந்தை வீட்டில் வசித்து வந்தாா். அண்மையில் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாம். இதனால் சிகிச்சையிலிருந்த அவா் வியாழக்கிழமை தனது தந்தை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.