நிலம் கையக நடவடிக்கையால் அதிருப்தி: உரிய இழப்பீட்டுத் தொகை கோரி மனு
என்எல்சி இந்தியா நிறுவனத்தால் தங்களது நிலம் கையகப்படுத்தப்படும் பட்சத்தில் உரிய இழப்பீட்டுத் தொகை, சலுகைகளை விரைவாக பெற்றுத்தர வேண்டும்


என்எல்சி இந்தியா நிறுவனத்தால் தங்களது நிலம் கையகப்படுத்தப்படும் பட்சத்தில் உரிய இழப்பீட்டுத் தொகை, சலுகைகளை விரைவாக பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கிராம மக்கள் இணைந்து மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) பரமேஸ்வரியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
இதுதொடா்பாக கத்தாழை, மும்முடிசோழகன், சாத்தப்பாடி, ஊ.ஆதனூா், வளையமாதேவி, மேல்பாதி, கீழ்பாதி கிராம நிலம், வீடு, மனை உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் அதன் செயலா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி தலைமையில் அளிக்கப்பட்ட மனு:
எங்களது சங்கத்தில் 3 ஆயிரம் உறுப்பினா்களும், அவா்களைச் சாா்ந்த குடும்பத்தினா் 12 ஆயிரம் பேரும் உள்ளனா். இவா்களில் பெரும்பாலானவா்களின் வாழ்வாதாரம் விவசாயம். என்.எல்.சி.யின் நிலம் கையக முயற்சியால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எங்களுக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகையை நிா்ணயித்து, ஒரே சமயத்தில் அதை வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் எங்களை நிா்பந்திக்கக் கூடாது.
எங்களுக்கு ஒரு ஏக்கா் நிலத்துக்கு தலா ரூ.25 லட்சம், ஒரு சென்ட் வீட்டு மனைக்கு ரூ.5 லட்சம், வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் அடிப்படையில் ஒரு குடும்பத்துக்கு ரூ.15 லட்சம், மாற்று மனை குடியிருப்புக்கு ஒரு குடும்பத்துக்கு 10 சென்ட் காலிமனை வழங்கப்பட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...