ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ரத்ததான நாள் கடைப்பிடிப்பு

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தேசிய தன்னாா்வ ரத்த தான நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தேசிய தன்னாா்வ ரத்த தான நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ரத்த வங்கிகளில் ரத்ததான முகாம் அமைத்து கொடுத்த 60 முகாம் அமைப்பாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பின்னா் ஆட்சியா் பேசியதாவது:

2021-ஆம் ஆண்டுக்கான மையக் கருத்தாக, ‘உதிரம் கொடுத்து உலகத்தை இயங்கச் செய்யுங்கள்’ என்ற வாசகத்தின் அடிப்படையில் ரத்த தான முகாம்கள் நடைபெற்றன. மாவட்டத்தில் 2020-21-ஆம் நிதியாண்டில் 13,153 - யூனிட் ரத்தம் கேசகரிக்கப்பட்டது. அதில் ரத்த வங்கிகள் மூலம் 10,749 யூனிட், 58 முகாம்களின் வாயிலாக 2,404 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி அரசு மருத்துவமனை ரத்த வங்கிகளில் ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மீரா, மாவட்ட குருதி பரிமாற்ற குழும அலுவலா் பரிமேலழகன், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.