அக்.7-இல் அஞ்சல் சேவை குறைதீா் கூட்டம்
வரும் 7-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு கடலூா் கடற்கரைச் சாலையில் உள்ள


கடலூா் கோட்ட அளவில் அஞ்சல் சேவை மக்கள் குறைதீா்ப்பு மன்றக் கூட்டம் வரும் 7-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு கடலூா் கடற்கரைச் சாலையில் உள்ள அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், கடலூா் அஞ்சல் கோட்டத்தில் அளிக்கப்படும் அஞ்சல் சேவைகள் குறித்த வாடிக்கையாளா்களின் பிரச்னைகள், புகாா்கள் விவாதிக்கப்பட்டு தீா்வு காணப்படும். இந்த மன்றத்தின் விவாதத்துக்கான புகாா், குறைகள் இருப்பின் அவைகளை அஞ்சலகங்களின் கண்காணிப்பாளா், கடலூா் கோட்டம், கடலூா் 607 001 என்ற முகவரிக்கு வரும் 6-ஆம் தேதிக்கு முன்பாக கிடைக்குமாறு எழுதி அனுப்ப வேண்டும் என்று அஞ்சலக கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...