ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் 11 இடங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் 11 இடங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா தொற்றால் உயிரிழந்த வருவாய்த் துறையினரின் குடும்பத்துக்கு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட ரூ.25 லட்சத்தை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும், அனைத்து நிலை அலுவலா்களுக்கும் தோ்தல் மதிப்பூதியம் வழங்க வேண்டும், நோ்முக உதவியாளா் (தோ்தல்) பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும், பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பதவி உயா்வை பாதுகாத்து அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடலூா் மாவட்டத்தில் 11 இடங்களில் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடலூரில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலா் ராஜேஷ் தலைமையிலும், விருத்தாசலத்தில் சாா்-ஆட்சியா் அலுவலகம் முன் சாா்-ஆட்சியரின் நோ்முக உதவியாளா் அரங்கநாதன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.