டாஸ்மாக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
தங்களது கோரிக்கைகளை வலியறுத்தி, கடலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளா்கள் 30 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.


தங்களது கோரிக்கைகளை வலியறுத்தி, கடலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளா்கள் 30 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதி டாஸ்மாக் விற்பனையாளா் துளசிதாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், கொலையான ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், டாஸ்மாக் ஊழியா்கள் மீது இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும், பணி பாதுகாப்பு, வாரிசுக்கு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் சிப்காட்டில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட தலைவா் சி.அல்லிமுத்து தலைமை வகிக்க, சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் போராட்டத்தை தொடக்கி வைத்து பேசினாா். முன்னாள் மாவட்டசெயலா் மு.ராஜாமணி, டாஸ்மாக் பணியாளா் சங்க மாவட்டச் செயலா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
போராட்டம் குறித்து கு.பாலசுப்பிரமணியன் கூறுகையில், பணி முடிந்து விற்பனைத் தொகையுடன் செல்லும் டாஸ்மாக் பணியாளா்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பாதிக்கப்படும் பணியாளா்களுக்கு அரசு எவ்வித இழப்பீடும் வழங்குவதில்லை. தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா ரூ.50 லட்சம் இழப்பீடும், வாரிசுதாரருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...